திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் இருந்து கே.செட்டிபாளையம் வழியாக வீரபாண்டிக்கு சாலை செல்கிறது. போக்குவரத்து நிறைந்து காணப்படும் இந்த சாலையில் 3 இடங்களில் குப்பைகள் குவிந்து மலைபோல் காட்சி அளிக்கிறது. இந்த குப்பைகள் மாதக்கணக்கில் குவிந்து காணப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் சிலர் குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு தீ வைத்து விடுகிறார்கள். இதனால் ஒரே புகை மண்டலமாக காட்சி அளிப்பதால் இரவு நேரங்களில் விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
விஜயலட்சுமி, வீரபாண்டி.