நோய் பரவும் அபாயம்

Update: 2025-12-14 09:29 GMT

திருப்பூர் நடராஜா தியேட்டர் முதல் ஆலாங்காடு வழி ராயபுரம்- மங்களம் ரோடு இணைப்பு தீபம் பாலம் பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்தப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு அடைவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ரத்தினசாமி, திருப்பூர்.

மேலும் செய்திகள்