குடியிருப்பில் குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2025-12-14 09:28 GMT

கொழுமம் ஊராட்சி அலுவலகம் அருகிலுள்ள மீனவர் குடியிருப்பு, அங்காளம்மன் கோவில் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளை நாய்கள் கலைத்துச் சிதறடிப்பதால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலாஜி, கொழுமம்.

மேலும் செய்திகள்