குமரலிங்கத்திலிருந்து பழனி செல்லும் சாலையில் காந்தி வீதி சந்திப்பு உள்ளது. இந்த சாலையில் இறைச்சி கழிவுகள், ஓட்டலில் சேகரமாகும் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் வெளியாகும் துர்நாற்றத்தால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. தெருநாய்கள் அங்கு வந்து உணவுக்காக சண்டையிடுகின்றன. இதனால் சாலையில் செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடனேயே அப்பகுதியை கடக்கின்றனர். எனவே குப்பைகளை உடனடியாக அகற்றவும் இனி அப்பகுதியில் குப்பைகள் கொட்டாமல் தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.