பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் குட்டை உள்ளது. இந்தக் குட்டையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நீரோடையில் கழிவுநீரை விட ஆரம்பித்தனர். காலப்போக்கில் கழிவு நீர் ஓடையாக மாறி, தற்போது குட்டையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.இந்த நிலையில் அந்த குட்டை அருகே, குப்பைகள், கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டி இரவு நேரங்களில் தீ வைப்பதால் புகை எழுந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஏற்கனவே குட்டை மாசுபட்ட நிலையில், குட்டையில் கொட்டி, கழிவுகளை தீ வைப்பதால் நோய் பரவும்அபாயம் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்