செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நரசங்குப்பம் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு அருகே குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் இப்பகுதி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், குப்பைகள் அதிகம் கொட்டப்படுவதால் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.