மதுரை மாநகராட்சி மண்டலம் 2, வார்டு 35, அண்ணாநகர் நியூ எச்.ஐ.ஜி.காலனி சாலையில், பொதுவெளி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் குப்பைகள் அகற்றபடாமல் அதிகளவில் குவிந்து கிடக்கின்றது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவர்களுக்கு டெங்கு, மலேரியா போன்று தொற்றுநோய் பரவும் அபாயமும் அதிகளவில் உள்ளதால் அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.