தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சிக்க மாரண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதி வெள்ளிச்சந்தை. இந்த பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சாலையோரம் குப்பை தொட்டி அமைக்கவும், ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-சுப்பிரமணி, மாரண்டஅள்ளி.