நோய் பரவும் அபாயம்

Update: 2025-11-16 13:43 GMT

பென்னாகரம் நாகமரை பிரதான சாலையில் நாகமரை அருந்ததியர் நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் மலை போல குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அதிகப்படியான துர்நாற்றம் வீசுகிறது. இந்த சாலையில் கடக்கும் பொதுமக்கள் மூக்கை பிடித்தவாரே செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் சுகாதார சீர்கேட்டால் ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் குப்பைகளை கொட்டாமல் இருக்கவும், குப்பைகளை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில், நாகமரை.

மேலும் செய்திகள்