இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2025-11-16 11:59 GMT

திருச்சி அம்பிகாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் அருகே சிலர் நேற்று இறைச்சி கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், குடியிருப்பு வாசிகள் இந்த இறைச்சி கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றத்தால் கடும் அவதி அடைந்தனர். தற்போது கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், இனிமேல் அந்த பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்