கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பு குப்பை தொட்டி ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அந்த குப்பைத்தொட்டி பழுதடைந்து குப்பைகள் வெளியே சிதறி கிடக்கின்றன. இதனால் அப்பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே புதிய குப்பைத்தொட்டி வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.