மதுரை ஒத்தகடை வேலம்மாள் நகர் பகுதியில் சாலையின் ஓரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு அதிகளவில் குவிந்து கிடக்கின்றது. இதனால் துர்நாற்றத்தால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்வார்களா?