கம்பம் அருகே ஊத்துக்காடு பகுதியில் உள்ள இடையான்குளம், வள்ளியம்மன்குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் அருகில் குப்பைகள் வீசப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், குளங்களில் தேக்கப்படும் தண்ணீரும் மாசடைகிறது. எனவே நீர்நிலைகளின் அருகில் வீசப்படும் குப்பைகளை அகற்றுவதுடன், அவற்றை கொட்டுபவர்கள் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.