வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கான் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அதன் அருகே அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளி அருகே லாரிகள் நிறுத்தும் இடத்தில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று சேகரித்து வந்த குப்பைகளை குவியல் குவியலாக கொட்டி வைத்துள்ளனர். சிலர் சேகரித்து வந்த குப்பைகளை வண்டிகளோடு விட்டு சென்றுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருள், வேலூர்.