பள்ளிபாளையத்தில் இருந்து குமாரபாளையம் செல்லும் வழியில் சில்லாங்காடு ஏரி உள்ளது. அந்த ஏரி பாசனத்தை நம்பி சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் நெல், வாழை, மஞ்சள் ஆகியவற்றை பயிர் செய்து வருகின்றனர். இந்த ஏரிக்கு அருகில் சாலையோரம் பொதுமக்கள் குப்பைகளை வீசி செல்கின்றனர். தெருநாய்கள் உணவுக்காக குப்பைகளை கிளறுவதால் கடுமையான துர்நாற்றம் ஏற்படுகிறது. எனவே அந்த இடத்தில் முன்பு இருந்தது போல குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.