குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2025-12-14 11:39 GMT

அரியலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பகுதியில் அதிகளவில் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், குவிந்துள்ள குப்பைகளை தெருநாய்களும், கால்நடைகளும் கிளறி வருவதால் அந்த குப்பைகள் காற்றில் பறந்து வருகின்றன. இதனால் அந்த பகுதியே குப்பைகளை கொட்டும் இடமாக மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்