சேலம் ரத்தினசாமிபுரத்தில் சாலையில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் தெருநாய்கள் அந்த குப்பையை கிளறும்போது கடும் துா்நாற்றம் வீசுகிறது. ஏற்கனவே 2 பேரல்கள் குப்பை கொட்டுவதற்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுவதால் அவை முழுவதும் நிறைந்து சாலையிலேயே கிடக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் கூடுதலாக குப்பை தொட்டிகள் வைத்து, சாலையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், ரத்தினசாமிபுரம், சேலம்.