குப்பை தொட்டிகள் மாற்றியமைக்கப்படுமா?

Update: 2025-11-02 11:13 GMT

சென்னை கொளத்தூர், 64-வது வார்டு, வி.வி. நகர் 3-வது தெருவில் பூங்கா, விளையாட்டு மைதானம் மற்றும் ஒரு மேல்நிலைபள்ளியும் அமைந்துள்ளது. அந்த சாலையில் உள்ள குப்பை தொட்டிகளால் அப்பகுதியின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. குப்பைகள் முழுவதுமாக நிறைந்து சாலைகளில் சிதறி கிடக்கும் அவலநிலையால் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறைசார்ந்த அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள குப்பைதொட்டிகளை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு மாற்றியமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்