சென்னை மாநகராட்சி 8-வது மண்டலம் 101-வது வார்டில் உள்ள திருவீதி அம்மன் கோவில் தெருக்களில் உள்ள சிறிய சந்துகளில் தேக்கமடைந்துள்ள குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கிறது. இந்த குறுகலான பகுதிக்குள் குப்பை அகற்றும் வாகனங்கள் செல்ல முடியாததால் பரிதாப நிலை நீடிக்கிறது. தேங்கும் இந்த குப்பைகளால் இந்த வழியை பயன்படுத்த முடியாமல் குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் தேக்கமடைந்துள்ள குப்பைகளை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.