சென்னை மாதனாங்குப்பம் பகுதியில் உள்ள திருமால் நகர் தெருமுனையில் குடியிருப்புகளின் குப்பைகளை அகற்றுவதற்காக மாநகராட்சி சார்பில் 4 குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. முறையாக அகற்றப்படாத குப்பைகளால் ஏற்படும் பயங்கர துர்நாற்றம் குடியிருப்புவாசிகளையும் பாதசாரிகளையும் வெகுவாக பாதிக்கிறது. மேலும் இரவு நேரங்களில் மாடுகள் தெருமுனையை ஆக்கிரமித்தும் அதன் கழிவுகள் அங்கேயே தேக்கமும் அடைந்துள்ளது. இதனால் வேலை முடிந்து வீடு செல்வோரின் நிலை பரிதாபமாகி உள்ளது. எனவே குடியிருப்புவாசிகளுக்கு இடையூறாக உள்ள இந்த குப்பை தொட்டிகளை மாற்று இடத்தில் அமைக்கவும் மாடுகளின் தொல்லையை கட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட மாநகராட்சிதுறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.