சென்னை பல்லாவரம் 6-வது வார்டு சீனிவாச பெருமாள் கோவிலின் எதிரில் பல நாட்களாக குப்பைகள் தேங்கி அலங்கோலமாக கிடந்தது. பயங்கர துர்நாற்றத்தாலும் எலிகள் நடமாட்டத்தாலும் அங்கு சாமி தரிசிக்க வருபவர்கள் பல இன்னல்களை சந்தித்தனர். இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறைசார்ந்த அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து துரித நடவடிக்கையாக அங்கிருந்த குப்பைகளை அகற்றினார்கள். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற ‘தினத்தந்தி‘ பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.