நோய் பரவும் அபாயம்

Update: 2025-10-26 17:23 GMT

சேலம் பச்சப்பட்டி 41-வது வார்டு பகுதியில் மாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த பகுதியில் அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய் தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் அதில் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மழைக்காலம் தொடங்கி உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பிரகாஷ், பச்சப்பட்டி, சேலம். 

மேலும் செய்திகள்