ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்குட்பட்டு சிகரலஅள்ளி கிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊரில் போதிய கழிவு நீர் கால்வாய் வசதிகளோ, குப்பை தொட்டிகளோ இல்லை. இதன் காரணமாக ஆங்காங்கே கழிவு நீர் குட்டை போல தேங்கி நிற்கிறது. அதேபோல இந்த பகுதியில் பிரதான சாலை ஓரங்களில் ஆங்காங்கே மலை போல குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் அமைத்து தரவும், கொட்டப்பட்டு கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், ஏரியூர்.