சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-10-19 11:43 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சண்முகா நகர் 2-வது பிரதான சாலையோரமாக குப்பைகள் தாறுமாறாக கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதுமே சுகாதாரகேடு அடைந்துள்ளது. பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் சாலைகளில் பறப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூராக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த பகுதிகளில் குப்பை தொட்டிகள் அமைக்கப்படவும் தேங்கியுள்ள குப்பைகள் அகற்றவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்