சாலையில் தேங்கும் கழிவுகள்

Update: 2025-10-19 11:20 GMT

சென்னை அமைந்தகரை சுண்ணாம்பு கால்வாய் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த சாலையில் கட்டிட கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டும் குப்பை தொட்டிகள் பாதி இடத்தை ஆக்கிரமித்தும், பாதி கழிவுகள் சிதறியும் கிடக்கிறது. இதனால் அந்த பாதையில் வாகனங்கள் சரிவர செல்ல முடியாத அவல்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சாலையில் தேங்கியுள்ள கழிவுகளை உடனடியாக அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்