கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள சர்வீஸ் சாலையோரத்தில் குப்பைகள் மூட்டை, மூட்டையாக கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றன. குறிப்பாக சூளகிரி பஸ் நிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரி பஸ்கள் வெளியே செல்லும் இடத்திலும், கிருஷ்ணகிரி பஸ்கள் வரக்கூடிய பாதை முழுவதும் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. எனவே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திம்மராயப்பா, சூளகிரி.