கண்டமங்கலம் வள்ளலார் அரசு பள்ளி அருகில் உள்ள பழைய பத்திர பதிவு அலுவலகம் விழுப்புரம்-நாகை 4 வழிச்சாலை விரிவாக்க பணிக்காக இடிக்கபட்டது. தற்போது அந்த கட்டிடம் பயன்படாமல் உள்ளதால் குப்பை, கழிவுகள் கொட்டும் இடமாக மாறியது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.