அரியலூர் மாவட்டம் எருத்துக்காரன்பட்டி ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளை சிலர் சாலையோரம் கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதி குப்பை மேடாக காட்சியளிப்பதோடு, அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்வதுடன், நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.