மலை போல குப்பை

Update: 2025-10-05 07:16 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபாலன் சாலையின் வல்லச்சேரி பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் பொதுமக்களுக்கு இடையூராகவும் சுற்றுப்புறத்துக்கு ஆபத்தாகவும் உள்ளது. இதனால் வரும் பயங்கர துர்நாற்றம் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. சாலையோரமாக வீசப்படும் இந்த கழிவுகளை சேகரிக்க அருகில் குப்பை தொட்டி அமைக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகள் தேங்காமல் இருக்க குப்பை தொட்டி அமைத்து அவைகள் முறைப்படி அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்