குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2025-10-05 07:13 GMT

செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூர் நடேசன் பள்ளி அருகே பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. அதன் அருகில் அளவுக்கு அதிகமான குப்பைகள் குவிந்து பார்ப்பதற்கே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. தூய்மை பணியும் சரிவர செய்யப்படவில்லை. மாணவ-மாணவிகள் அதிகமாக நடமாடும் பகுதியில் இதுபோன்ற நிலை நீடிப்பது சுகாதார சீர்கேடுக்கு வழிவகுக்கும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இங்கு குவிந்துள்ள குப்பைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்