திருப்பூர் பென்னி காம்பவுன்ட் பகுதியில் பொதுமக்கள் குப்பைகள் கொட்டி வருகின்றனர். அருகில் பள்ளி உள்ளதால், பள்ளி செல்லும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், குப்பைகளில் உணவு தேடி வரும் தெருநாய்களால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.