விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்லும் பாதையின் இருபுறங்களிலும் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடப்பதுடன் கருவேல மரங்களும் சாலையை மறைத்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் இறந்தவர்கள் உடலை கொண்டு செல்ல பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா. எனவே சாலையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள் மற்றும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?