கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையோரத்தின் இருபுறங்களிலும் பல இடங்களில் குப்பைகளை சுற்றுலா பயணிகள் வீசியெறிந்து செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி சுற்றுலா பயணிகள் குப்பைகளை வீசிச்செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.