இரணியல் கிளை கால்வாய் பரம்பை பகுதி வழியாக பாய்கிறது. இந்த கால்வாயில் சிலர் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர். இதனால், தண்ணீர் மாசடைவதுடன், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக கால்வாய் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுகளை அகற்றுவுடன், அங்கு கழிவுகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் தடுப்பு வேலி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவராம், பரம்பை.