திருப்பூர் ஏ.பி.டி. சாலையோரம் ஜம்மனை ஓடை செல்கிறது. இதை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த ஓடையில் கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் குவிந்து காணப்படுகிறது. இதனால் அந்த கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அங்குள்ள குடியிருப்புகளுக்குள் சென்று தொல்லை கொடுக்கிறது. மேலும் இதன்மூலம் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே ஜம்மனை ஓடையில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருக்குமரன், தட்டான்தோட்டம்.