தர்மபுரி நகரில் கிருஷ்ணகிரி சாலையில் ராமாக்கால் ஏரி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலையில் இரவு நேரங்களில் இறைச்சி கழிவுகள், கட்டிடக்கழிவுகள், உணவகங்களில் சேகரமாகும் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் நடக்கக்கூட முடியாத நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் அங்கு கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றுவதுடன், மேலும் அந்தப் பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தடைவிதித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-கந்தசாமி, மதிகோன்பாளையம்.