நடவடிக்கை தேவை

Update: 2025-08-31 07:19 GMT

கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட தெருவுக்கடை பகுதியில் திறந்தவெளியில் மீன்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் ஆங்காங்கே பிளாஸ்டிகள் கழிவுகள், குப்பைகள் தேங்கி காணப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மழை காலங்களில் அந்த பகுதி சேரும் சகதியுமாக காணப்படுவதால் அங்கு வரும் பொதுமக்களும், மீன் வியாபாரிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் மீன் வியாபாரிகள் நலன்கருதி மீன்சந்தைக்கு மேற்கூரையுடன் கட்டிடம் அமைக்கவும், அங்கு தேங்கும் குப்பைகள், கழிவுகளை உடனுக்குடன் அகற்றிடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெகன், தெருவுக்கடை.

மேலும் செய்திகள்