சுகாதார சீர்கேடு

Update: 2025-08-24 13:29 GMT

ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சிகரஅள்ளியில், சாலை ஓரம் ஆங்காங்கே மலைபோல் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இந்த காரணமாக நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எப்போது தான் இதற்கு தீர்வு கிடைக்குமோ? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

-முத்துக்குமார், சிகரல அள்ளி.

மேலும் செய்திகள்