ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காக்காத்தோப்பு பகுதியில் சாலையோரங்களில் குப்பைகள் அதிகளவு தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்றவும், இப்பகுதியில் குப்பைத்தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமா?