சுற்றுச்சூழல் மாசு அடையும் அபாயம்

Update: 2025-08-24 11:07 GMT


திருப்பூர் கே.செட்டிப்பாளையம் பகுதியில் சாலையோரமாக குப்பைகள் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. இந்த குப்பைகளுக்கு ஒருசிலர் தீ வைத்து உள்ளனர். இதனால் இரவு- பகலாக குப்பைகளில் தீப்பிடித்து எரிவதோடு புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. தொடர்ந்து புகை சூழ்ந்து காணப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு அடையும் அபாயம் நிலவுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், குப்பைகளுக்கு தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

மகாபிரபு, கே.செட்டிப்பாளையம்.

மேலும் செய்திகள்