திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வார்டுகளிலும் தற்போது குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் அந்தப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக துர்நாற்றம் வீசுவதால் சுற்றுச்சூழல் மாசு அடைவதோடு, சுகாதார சீாகேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே குவியும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கசாமி, திருப்பூர்.