மதுரை வார்டு எண் 47 மண்டலம் எண் 4 தெற்கு வாசல் தெற்கு மாரட் வீதி மஞ்சணக்கார தெரு எதிர்ப்புறம் உள்ள குறுக்கு தெருவில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?