சுகாதார சீர்கேடு

Update: 2025-08-17 17:02 GMT

தர்மபுரி நகரை ஒட்டி உள்ள பிடமனேரி ஏரியில் தற்போது மழைநீர் நிரம்பியுள்ளது. இந்த ஏரியின் வடக்கு பகுதி கரையையொட்டி உள்ள தார்சாலை ஓரத்தில் குப்பைகள், கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதனால் உருவாகும் புகை இந்த சாலை வழியாக சென்று வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த பகுதியில் குப்பைகளை கொட்டி எரிப்பதை தடுக்கவும், சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், தர்மபுரி.

மேலும் செய்திகள்