திருக்கோவிலூர் பெரிய ஏரியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது. மேலும் ஆக்கிரமிப்பால் ஏரியும் சுருங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் விவசாய பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.