நோய்த்தொற்று பரவும் அபாயம்

Update: 2025-08-10 11:51 GMT

கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் அருகே சீத்தப்பட்டி காலனி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் குப்பை கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாகவே இதுபோன்று கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், இப்பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் இறைச்சி கழிவுகளை வெளியூர்களிலிருந்து கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். தற்போது காற்று காலம் என்பதால் அதிகளவு துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சீத்தப்பட்டி காலனி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்