திருவட்டார் பாலத்தின் அடியில் சிலர் கோழி மற்றும் மீன் கழிவுகளை இரவு நேரத்தில் கொட்டுகின்றனர். அவ்வாறு கொட்டப்படும் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் தண்ணீர் மாசடைகிறது. அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசுவதுடன், ஆற்றில் குளிப்பவர்களுக்கு தொற்நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி திருவட்டார் பாலம் பகுதியில் கோழி மற்றும் மீன் கழிவுகளை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அகஸ்டின், ஆற்றூர்.