ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த சாலையோரத்தில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் குப்பை தொட்டிகள் கவிழ்ந்து கிடக்கின்றன. அத்துடன் சேதம் அடைந்து காணப்படுகின்றன. இதனால் வனப்பகுதியில் குப்பைகளை வீசிச்செல்லும் நிலை உள்ளது. எனவே சாலையோரத்தில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளை முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.