கன்னிவாடியில், நவாப்பட்டி சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே குப்பைக்கிடங்கு செயல்படுகிறது. இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளில் இறைச்சி கழிவுகள் தான் அதிகம் இருக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இங்கு திடக்கழிவு மேலாண்மையும் செய்யப்படுவதில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.