விருதுநகர்-புல்லலக்கோட்டை கிராமத்திற்கு செல்லும் சாலையில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் தேங்கி கிடக்கின்றது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. மேலும் இதில் இருந்து எழும் துர்நாற்றத்தால் அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்றவும் கூடுதல் குப்பைத்தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.