புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி

Update: 2025-08-03 13:26 GMT

திருப்பூர் மாநகரின் மையப்பகுதியில் நொய்யல் ஆறு செல்கிறது. தற்போது நொய்யல் கரையோரங்களில் குப்பைகள் கொட்டாத வகையில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மணிக்காரம்பாளையத்தில் இருந்து காசிப்பாளையம் செல்ல நொய்யல் கரையோரம் மண் சாலை உள்ளது. இங்கு குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் மூச்சுத்திணறலால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் எனவே குப்பைகளை அகற்றுவதோடு நொய்யல் கரையோரம் குப்பைகள் கொட்டி தீ வைக்காதவாறு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரிசெல்வம், மணியக்காரம்பாளையம்.

மேலும் செய்திகள்